புத்ரா ஜெயா, ஜூன் 12-
2020 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மொத்தம் 34,919 ஊழல் புகார்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெற்றிருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
விசாரணைகளில் 354 கோடி வெள்ளி மதிப்பிலான சொத்துகளை கையகப்படுத்தி, 2,787 கோடி வெள்ளி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாங்கியில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோது அவர் சுட்டிக் காட்டினார்.
6,145 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு, 5,703 நபர்கள் கைது செய்யப்பட்டு, 2479 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதோடு 1,744 பேர் நீதிமன்ற தண்டனையையும் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

