கோலாலம்பூர், ஜூன் 12-
பேருந்து உட்பட கனரக ஓட்டுநர்களுக்குக் கட்டாய போதைப் பொருள் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென துன் மகாதீர் முகமது வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் பேருந்து விபத்தில் கொல்லப்பட்ட விவகாரம் சம்பந்தமாகப் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பேருந்து ஓட்டுநர்களில் பலர் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருக்கும் பிரச்சினை பல காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விவகாரமாக உருவாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

