Site icon அநேகன்

தாயையும் தனயனையும் கொன்ற 17 வயது ஆடவன் கைது

புக்கிட் ரம்பாய், ஜூன் 12-

சொந்தத் தாயையும் தனயனையும் கொன்றதாக நம்பப்படும் 17 வயது ஆடவனை மலாக்கா போலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம், மலாக்கா, புக்கிட் ரம்பாயில் இன்று காலை மணி 5.00 அளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதில் 51 வயதான பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் தாயாரும் 21 வயது அண்ணனும் உடலில் பல்வேறு இடங்களிலும் கத்திக் குத்துக் காயங்களோடு ஓர் அறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டதாக மலாக்கா போலீஸ் தலைவர் சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

இளைஞனின் 13 வயது தம்பி சிறிய காயங்களோடு தப்பித்துள்ளார். கல்வி சம்பந்தமான நெருக்குதலுக்கு ஆளாகி மன அழுத்தத்தின் காரணமாக அந்தக் குற்றத்தை ஆடவன் செய்திருக்கலாம் என்று தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

 

Exit mobile version