புத்ராஜயா, ஜூன் 20-
மாணவர்களின் தொடக்க நிலையிலான பள்ளி இடைநிற்றலைத் தடுப்பதற்கும், தேசிய கல்வி சீர்திருத்த கொள்கையின் ஒரு பகுதியாகவும், பாலர் பள்ளி கல்வியை கட்டாயமாக்கும் கொள்கையை அமல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இடைநிலை, ஆரம்ப நிலை கல்வியை கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து, கல்வி அமைச்சின் மிக பெரிய முயற்சிகளில் ஒன்றாக அந்நடவடிக்கை அமைந்துள்ளதாக, அதன் அமைச்சர் ஃபாட்லினா சிடேக் தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், அது குறித்த மசோதா தாக்கல் செய்யப்படும்.
முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதுமான ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆகியவை தேசிய கல்வி தரத்தையும் மதிப்பையும் உயர்த்துவதற்கு சவாலாக உள்ளது.
இருந்தாலும், பாலர் பள்ளி கல்வியை கட்டாயமாக்கும் கொள்கையை இனியும் தாமதிக்க முடியாது என ஃபாட்லினா சிடேக் சொன்னார்.

