Site icon அநேகன்

EPF சேமிப்பிலிருந்து, மருத்துவக் காப்பீட்டு தொகையை செலுத்த அனுமதிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது.

கோலாலம்பூர், ஜூன் 20-

ஊழியர் சேமநிதி வாரியம் – EPF-ப்பின் பங்களிப்பாளர்கள், அவர்களது இரண்டாம் கணக்கிலிருந்து, மருத்துவ காப்பீட்டு பிரிமியம் தொகை செலுத்த அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது உட்பட மிகவும் விரிவான மருத்துவ பாதுகாப்பை பெறுவதில், அந்நடவடிக்கை EPF-பின் சுமார் 16 மில்லியனுக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்களுக்கு பயனளிக்கும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கெஃப்லி அகமட் தெரிவித்தார்.

பெரும்பாலான மக்கள் போதுமான காப்பீட்டு பாதுகாப்பை பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த அணுகுமுறை பல நாடுகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த நாட்டில் மொத்த மருத்துவ பராமரிப்பு செலவினங்களில் 32 சதவீதம் நோயாளிகளே ஏற்றுக்கொள்கின்றனர்; எந்தவொரு காப்பீட்டு நிறுவனமும் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே, பங்களிப்பாளர்கள் தங்கள் பங்களிப்பில் ஒரு சிறிய பகுதியை மருத்துவ பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் நீண்டகால பிரச்சனைக்கு தீர்வாக அது அமையும்.

ஆயினும், இந்த திட்டம் கட்டாயமாக்கப்படாது, மாறாக பங்களிப்பாளர்களுக்கு ஒரு விருப்பமாக வழங்கப்படும் என டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கெஃப்லி கூறினார்.

Exit mobile version