Site icon அநேகன்

நஜீப்பின் நிபந்தனையோடு விடுதலை நீதித்துறை விவகாரம்! – பிரதமர் 

சுபாங் ஜெயா,ஜூன் 20-

டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டது குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைக்க மறுத்தார்.

“இது நீதித்துறை விவகாரம். இது பற்றி நான் கருத்துரைக்க விரும்பவில்லை. இது சட்டத் துறை தலைவரிடம் கேட்க வேண்டிய கேள்வி” என்று பூச்சோங்கில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 27 மில்லியன் வெள்ளி நிதி தொடர்பான மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் பிரதமர் நஜீப் இன்று  விடுவிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version