Site icon அநேகன்

புதிய போலீஸ் தலைவராக முகமது காலிட் இஸ்மாயில் நியமனம்! 

கோலாலம்பூர், ஜூன் 20-

புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் நாட்டின் 15ஆவது போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு பெறவிருக்கும் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேனுக்குப் பதிலாக முகமது காலிட் இஸ்மாயில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

தலைநகரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் (புலாபோல்) இன்று நடைபெற்ற போலீஸ் தலைவரின் பதவி ஒப்படைப்பு மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நியமன கடிதத்தை முகமது காலிட்டிடம் ஒப்படைத்தார்.

முகமது காலிட் கடந்த 2023 மே 8 ஆம் தேதி புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

 

Exit mobile version