Site icon அநேகன்

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது!

கோலாலம்பூர், ஜூன் 23-உலக சந்தையின் பதற்ற நிலையைத் தொடர்ந்து அமெரிக்க டாலர் உட்பட பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவ்வகையில் இன்று காலை 8 மணியளவில் மலேசிய ரிங்கிட் 4.2420/2655-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஈரான் – இஸ்ரேல் போர், அமெரிக்காவின் தாக்குதல்கள் முதலியவையே காரணங்கள் என்று கூறப்படுகின்றன.

இவற்றின் அடிப்படையிலேயே மலேசிய ரிங்கிட் முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக வலுப்பெற்றிருப்பதாக பேங்க் முவாமாலாட் மலேசியா நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் டாக்டர் முகமது அஃப்சானிசாம் அப்துல் ரஷிட் தெரிவித்தார்.

 

Exit mobile version