சிப்பாங், ஜூன் 23-
மலேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎம்) வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்அரசாங்க நிர்வாகத்திலிருந்து விலகி தனியாகச் செயல்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு இம்மாதம் 11-ஆம் தேதி அரசாங்கம் ஒப்புதல் அளித்ததை அந்தோணி லோக் சுட்டிக் காட்டினார்.
மலேசிய விமான போக்குவரத்து ஆணையமான மேவ்கோமுடன் சிஏஏஎம் ஒன்றிணைக்கப்படுவதால் அடுத்த 10 ஆண்டுகளில் அரசாங்கம் 1.5 முதல் 2 பில்லியன் வெள்ளி வரை சேமிக்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
தனித்து செயல்படவிருப்பதால் சிஏஏஎம் இனி அரசாங்கத்தின் நிதியைச் சார்ந்திருக்கத் தேவையில்லை என்றார் அமைச்சர்.

