Site icon அநேகன்

நயிமாவின் சொத்து முடக்கம்: தற்காலிகமாக நிறுத்த அனுமதி

கோலாலம்பூர், ஜூன் 23-லண்டனில் உள்ள மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் ஜைனுடின் மனைவி நயிமாவின் சொத்துகள்  முடக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்த  இங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  (எம்ஏசிசி) லண்டனில்  உள்ள நயிமாவின் £132 மதிப்புள்ள  சொத்துகளை முடக்கும்படி  உத்தரவு பிறப்பித்தது.

இந்த நீதிமன்ற உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி  நயிமா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரின்  மனுவை நீதிபதி அஸார் ஏற்றுக் கொண்டு சொத்து முடக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க  உத்தரவிட்டார்.

Exit mobile version