கோலாலம்பூர், ஜூன் 23-
தொழில்நுட்ப, தொழில் திறன் பயிற்சியை (டிவெட்) முடித்த மாணவர்களை அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கு மாற்றாக அரசாங்கம் நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ அறைகூவல் விடுத்துள்ளார்.
அவர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக மாதமொன்றுக்கு 3,000 ரிங்கிட்டை வழங்குவதன் மூலம் அந்நிய தொழிலாளர்களை நம்பியிருக்கும் போக்கை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இதனைக் கருத்தில் கொண்டு அமைச்சுகளும் மாநில அரசாங்கங்களும் டிவெட் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக விளங்கும் தொழிற் துறைக்குப் போதுமான ஆள்பலத்தை அதிகரிக்க முடியும் என்றும் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
(பொன் முனியாண்டி)

