Site icon அநேகன்

இதுகாறும் அரசியலில் ஈடுபட்டதில்லை! புதிய போலீஸ் தலைவர் 

கோலாலம்பூர், ஜூன் 23-

நாட்டின் புதிய போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் காலிட் இஸ்மாயில் தமது 38 ஆண்டு கால போலீஸ் பணியில், அரசியலில் ஈடுபட்டது கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதுகாறும் தாம் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இருந்தது கிடையாது என்றும் தம்மைப் பற்றித் தவறான செய்தி பரப்பப்பட்டு தமக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியிருப்பதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதனிடையே, காலிட்டை பிகேஆர் உறுப்பினர் என்று விமர்சித்திருந்த சினார் ஹரியான் பத்திரிகை அதற்காக மன்னிப்பைக் கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

(பொன் முனியாண்டி)

 

Exit mobile version