Site icon அநேகன்

பன்னிரு திருமுறை பாடல்களை  முறையாக ஓதும் பயிற்சி !

கோலாலம்பூர், ஜூன் 25-

உலகப் புகழ்பெற்ற ஓதுவார்மூர்த்தி ப.சம்பந்தம் குருக்கள் ஐயா தலைமையில் பன்னிரு திருமுறை பாடல்களை முறையாக ஓதுவதற்கான 2 நாள் நிகழ்நிலை பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சைவ உலகில் திருமுறை சைவ சமயக் குரவர்கள் நால்வர் எனப் போற்றப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரை நாம் அறிந்திருப்போம்.

சைவ உலகிற்கு மொத்தம் 27 திருமுறை ஆசிரியர்கள் இருப்பதைப் பெரும்பாலானோர் அறியாமல் இருப்பார்கள். இவர்களைச் சைவ சமய உலகத்திற்கு நினைவூட்டும் முயற்சியாக ஜூன் மாதத்தில் 2 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

ஒரு திருமுறையிலிருந்து ஒரு திருமுறைப் பாடலைத் தேர்வு செய்து ஓதுவார்மூர்த்தி ப.சம்பந்தம் குருக்கள் ஒவ்வொரு மாதமும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 2 நாட்களில் நிகழ்நிலை வகுப்பை நடத்தவுள்ளார்.

ஜூன் 28ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை மற்றும் ஜூன் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை ஜூன் மாதத்திற்கான வகுப்புகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு அர்த்தஞான மையத்தைச் சேர்ந்த அரவிந்தனை 0123025643 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப்

பெற்றுக் கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி naalvar_team@yahoo.com, வலைத்தளம் www.arthanyana.org

 

Exit mobile version