கோலாலம்பூர் , ஜூன் 25-
அண்மையில் தொடங்கப்பட்ட மடானி சுகாதார சேவை திட்டத்தின் வழி ரஹ்மா ரொக்க உதவி நிதியைப்( எஸ்டிஆர்) பெறும் பயனாளிகள் தனியார் கிளினிக்குகளில் நோய்க்கான சிகிச்சையைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக புரோடெக் ஹெல்த் கார்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், எஸ்டிஆர் பயனாளிகள் கோலாலம்பூர், கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான், ஜொகூர் பாரு, பேராக் கிந்தா, பினாங்கு தீமோர் லாவுட், கோத்தா கினபாலு மற்றும் கூச்சிங்கில் உள்ள பதிவு பெற்ற தனியார் கிளினிக்குகளில் இலவச சிகிச்சையைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் 250 ரிங்கிட், தனிநபருக்கு 150 ரிங்கிட்டுக்கு உட்பட்ட கட்டணத்தில் சிகிச்சையைப் பெறலாம்.
எஸ்டிஆர் பயனாளிகள் தங்களின் அடையாள அட்டையைக் கொண்டு தங்களின் தகுதியைப் பரிசோதித்த பின்னர், சிகிச்சையைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பொன் முனியாண்டி

