Site icon அநேகன்

சைபர்ஜெயாவில் தனியார் பல்கலைக்கழக மாணவி சடலமாக கண்டெடுப்பு

சைபர்ஜெயா, ஜூன் 26-

சைபர்ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் 20 வயது மாணவி ஒருவர், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை அவரது விடுதி அறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சரவாக் கூச்சிங்கைச் சேர்ந்த அந்த மாணவி, நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் உடலில் காயங்களுடன் அவரது அறையில் உயிரற்ற நிலையில் கிடப்பதை கண்ட அவரது நண்பர், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பிசியோதெரபியில் இளங்கலை பட்டப்படிப்பைப் பயின்று வந்த அந்த மாணவி, அந்த அறையில் 5 நண்பர்களுடன் தங்கியிருந்தார்.

எனினும், கடந்த ஜூன் 21ஆம் தேதி தொடங்கி, அவர்கள் அனைவரும் விடுமுறைக்காகச் சென்றுவிட்டதால், தேர்வுக்காக அவர் தனியாக அறையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், அம்மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அம்மாணவியின் மடிக்கணினி உட்பட அவரது விலையுயர்ந்த பொருட்கள், காணாமல் போயிருப்பதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக, போலீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காணொலி பரவலாகி வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில், கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவிருப்பதாக செப்பாங் மாவட்ட போலீஸ் கூறியதாக, பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

 

Exit mobile version