Site icon அநேகன்

SPRM அதிகாரிகள் உடல் பருமனாக இருந்தால் பதவி உயர்வு கிடையாது! -அஸாம் பாக்கி

கோலாலம்பூர், ஜூலை 4-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் – SPRM-மின் அதிகாரிகளும் உறுப்பினர்களும், உடல் பருமன் அல்லது நிர்ணயிக்கப்பட்ட உடல் நிறை குறியீட்டு (BMI) அளவை பூர்த்தி செய்ய வேண்டும்.

இல்லையென்றால், 2026 ஜனவரி முதல் பதவி உயர்வுக்கு அவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என அவ்வாணையத்தின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

SPRM ஊழியர்களிடையே ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், அவர்களின் தோற்றம் மற்றும் உடல் தகுதி எப்போதும் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

பல பொதுச்சேவை ஊழியர்கள் உடல் பருமன் அல்லது அதிக எடை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

அதிக எடை இருப்பது, தோற்றம், உடல் தகுதி மற்றும் பொது மக்களுக்கு நாம் வழங்கும் சேவையை பாதிப்பதாக தான் ஸ்ரீ அஸாம் பாக்கி மேலும் தெரிவித்தார்.

Exit mobile version