ஜோகூர், ஜூலை 4-
ஜோகூர்பாருவில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் நின்றிருந்த காரில் இருந்த நபரிடம் கொள்ளையடிக்கக் கத்திகளோடு பாய்ந்த நான்கு கொள்ளையர்களின் மீது காரில் இருந்தவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொள்ளையர்களை விரட்டி அடித்துள்ளார்.
மறைக்காணி கருவியில் பதிவான அந்தக் காணொளிக் காட்சியில் அந்த 4 கொள்ளையர்களும் முகமூடி அணிந்து கத்தியோடு காரிலிருந்த நபரைத் தாக்க முற்பட்டபோது காரில் இருந்த நபர் தமது துப்பாக்கியால் அவர்களைப் பல முறை சுட்டதை எதிர்ப்பார்க்காத மூவர் தலைதெறிக்க காரில் ஏறி தப்பித்த வேளையில், நாலாவது நபர் சாலையை நோக்கி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. இது பற்றிப் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாகத் தெரிகிறது.
-பொன் முனியாண்டி

