கோல சிலாங்கூர், ஜூலை 4-
தனது வளர்ப்பு பிள்ளை மீது பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளித்து, கத்தியால் வெட்டிய 54 வயது மாற்றான் தாய்க்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட தாய் சிறைத் தண்டனை முடிந்த பின்னர் ஈராண்டு கால நன்னடத்தைக் கட்டுப்பாட்டில் இருப்பதோடு 40 மணி நேரம் பொதுச் சேவையை மேற்கொள்ள வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேற்கண்ட குற்றமானது இவ்வாண்டு ஜூன் மாதம் கோல சிலாங்கூர் தாமான் பெண்டாஹாராவில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
-பொன் முனியாண்டி

