Site icon அநேகன்

நாட்டிற்கான எனது சேவையை மட்டுமே மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்! -துன் மகாதீர்  

கோலாலம்பூர், ஜூலை 10-

இன்று தமது நூறாண்டு அகவையை எட்டியிருக்கும் துன் மகாதீர் முகமட், நாட்டிற்கான தமது சேவையை மட்டும் மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் பதவியைத் தாம் விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அது நல்வாய்ப்பாகத் தமக்கு வந்ததாகவும் தம்மால் முடிந்த அளவு பிரதமர் பதவியில் நாட்டின் வளப்பத்திற்காகவும் மக்களின் நல்வாழ்விற்காகவும் தாம் பாடுபட்டதாகக் குறிப்பிட்ட அவர், தாம் எக்காலத்திலும் பதவியைச் துச்சமென மதித்து அதனைத் தவறாகப் பயன்படுத்தியது கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு நல்வாழ்த்தினைத் தெரிவித்திருக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட துன் மகாதீர், நாட்டிற்கான சேவையை முன்னிறுத்தி மக்கள் தம்மை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version