Site icon அநேகன்

நிறைவான சம்பளமே சுகாதார சேவையாளர்களை நிலைத்திருக்க செய்யும்! 

ஜொகூர் பாரு, ஜூலை 10-

நாட்டில் சுகாதார பணியாளர்களின் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக வியாபித்திருப்பதை பல தரப்பினரும் சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் வழங்கப்படும் மேலதிக சம்பளமே நாட்டில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் அந்நாட்டிற்குச் செல்வதற்கான காரணம் என ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் லிங் தியான் சூன் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே, அதிகமான தாதியர்களுக்குப் பயிற்சிகளை அளிப்பதோடு மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் மன நிறைவு தரும் வகையில் சம்பளத்தைக் அதிகரிப்பதோடு இணக்கமான வேலையிட சுற்றுச் சூழலையும் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version