Site icon அநேகன்

முக்கிய முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்காதீர்! முஹிடின்னுக்கு பாஸ் நினைவுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 14-

பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியில் முக்கிய கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு முன், அதன் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், கூட்டணியிலுள்ள உறுப்புக் கட்சிகளுடன் ஒருமித்த கலந்துரையாடல் நடத்த வேண்டும் என பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை பாஸுடன் முன்கூட்டியே விவாதிக்காமல், தான் ஸ்ரீ முஹிடின் அறிவித்ததாக, பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் குற்றஞ்சாட்டினார்.

“கொள்கை முடிவுகள் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்படக் கூடாது; முதலில் கூட்டணிக் கட்சிகளுடன் விவாதிக்கப்பட்டு, ஒருமித்து முடிவெடுக்கப்பட வேண்டும்,” என்றாரவர்.

பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியில், பாஸ், பெர்சாத்து இடையேயான ஒத்துழைப்பு, பொருளாளர் மற்றும் செயலாளர் பதவி நியமனங்கள் போன்றவற்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பலவீனமடைந்திருப்பதாக சிலர் கருதுகின்றனர்.

குறிப்பாக, திரெங்கானு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அஹமட் சம்சுரி மொக்தார், பெரிக்காத்தான் நேஷ்னல் பொருளாளர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு விலகியது, செயலாளர் பதவிக்கு பாஸின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டது ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இதனிடையே, பெரிக்காத்தான் நேஷ்னலின் அமைப்பு மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு திருத்தம் குறித்து விவாதிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஸ் கட்சி துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.

Exit mobile version