கோம்பாக், ஜூலை 14-
குறைந்த கட்டணம் காரணமாக கேடிஎம் ரயில் நிறுவனம் லாபம் ஈட்டவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
தனது ரயில் சேவைகளின் டிக்கெட் விலைகளை அதிகரித்தால் மட்டுமே கேடிஎம் லாபத்தை ஈட்ட முடியும் என்று அமைச்சர் சொன்னார்.
இருப்பினும், இப்போதைக்கு இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றார்.
கேடிஎம் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் என்பதால் லாபம் ஈட்டுவது பெரிய விவகாரமாகக் கருதப்படவில்லை என்று பத்துமலை பேருந்து வளாகத்தில் புதிய டீசல் பேருந்து அறிமுக விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அந்தோணி லோக் பேசினார்.

