Site icon அநேகன்

ரஃப்சி இல்லாதது பிகேஆர் கட்சிக்கு இழப்பு! சரவாக் அமைச்சர்

கூச்சிங், ஜூலை 15-

முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி பிகேஆர் கட்சியிலிருந்து விலகியது அக்கட்சிக்குப் பேரிழப்பு என்று சரவாக் மாநில சுற்றுலா, புத்தாக்க மற்றும் கலைத்துறை அமைச்சர் அப்துல் கரிம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது பிகேஆர் கட்சியிலிருந்தால் அக்கட்சி கூடுதல் வலுப்பெற்று இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ரஃபிசி கட்சியின் முன்னெடுப்புகளுக்கும் நிர்வகிப்பிற்கும் சரியான உத்திகளையும் கையாளும் திறன் கொண்டவர் என்றும் அப்துல் கரிம் சுட்டிக் காட்டினார்.

பிகேஆர் கட்சி அரசியல் ஆளுமையும் திறனும் கொண்ட ஓர் உறுப்பினரை இழந்து விட்டதாக அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், கடந்த 14-ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வீழ்ச்சிக்கு ரஃபிசி முதன்மை பங்காற்றினார் என்றும் அப்துல் கரிம் தெரிவித்தார்.

பிகேஆர் கட்சியிலிருந்தபோது ரஃபிசி அரசாங்கத்திற்கு எதிராக எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை என்றார் அவர்.

முன்னதாக, பிகேஆர் கட்சி தேர்தலில் தோல்வியுற்ற ரஃபிசி அக்கட்சியிலிருந்தும் பொருளாதார அமைச்சர் பதவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

 

Exit mobile version