Site icon அநேகன்

ஜெவுக்கு சிகிச்சை அளித்த தாதி தற்கொலை முயற்சி!

சென்னை, ஜூலை 18-

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த குலோரியா எனும் தாதி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இவருடைய கணவர் 4 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 16ஆம் தேதி, இந்த 2 குழந்தைகளும் கெட்டுப் போன உணவைச் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேல் சிகிச்சைக்கான அவ்விருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் அது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விசாரிக்கத் தொடங்கினர்.  கெட்டுப் போன உணவுதான் அதற்குக் காரணமென குலோரியா போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த பழைய மாத்திரைகளைச் சாப்பிட்டு குலோரியா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவீர சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

Exit mobile version