Site icon அநேகன்

மலேசிய ஊடக மன்றம்: முத்தமிழ் மன்னன் உட்பட 12 பேர் உறுப்பினர்களாக நியமனம்! 

புத்ரா ஜெயா , ஜூலை 15-

மலேசிய ஊடக மன்றத்தின் உறுப்பினர்களாக 12 பேர் இன்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டனர்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ. வே. முத்தமிழ் மன்னன் உட்பட ஆறு பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தகவல் தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங்கும் கலந்து கொண்டார்.

மலேசிய ஊடக மன்றத்தை வழி நடத்த முதல் 12 வாரிய உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சு அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டது.

இவர்கள் அனைவரும் மலேசிய ஊடக மன்றச் சட்டம் 2025இன் கீழ் நியமிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

இந்த மன்றம் மலேசிய மடானி கொள்கையின் கீழ் ஊடகச் சுதந்திரத்தைப் பேணிக் காக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது.

மலேசியர்களுக்குத் துல்லியமான தகவல்களை வழங்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தவும் இம் மன்றம் அமைக்கப்பட்டது என்று தகவல் தொடர்பு அமைச்சு விவரித்தது.

இம்மன்றத்தின் உறுப்பினர்கள் பத்திரிகை, சமூக ஊடகம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் பெற்றிருக்கும் அனுபவம் மற்றும் பங்களிப்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version