Site icon அநேகன்

தலைமை நீதிபதிக்கான உத்தேச பட்டியல்: அமாட் தாரிருடினின் பெயர் இல்லை

கோலாலம்பூர், ஜூலை 16-

காலியாக இருக்கும் நாட்டின் தலைமை நீதிபதிக்கான உத்தேச பட்டியலில் தற்போது சட்டத் துறைத் தலைவராக இருக்கும் அமாட் தாரிருடினின் பெயர் இடம்பெறவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாரிருடினின் பெயர் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியலிலும் மேல் முறையீட்டு நீதிபதிகளின் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நீதித்துறை நியமன ஆணையம் தயாரித்திருந்த தலைமை நீதிபதிக்கான பட்டியலில் அமாட் தாரிருடினின் பெயர் இருந்துள்ள விவரம் கசிந்துள்ளதாகப் பெரும் பரபரப்புச் செய்தி உலவி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.

மேலும், சட்டத்துறைத் தலைர் பொறுப்பில் இருக்கும் தாரிருடின் அரசுக்கு ஆதரவாக சில தவறான  முடிவுகளை எடுத்திருந்ததாகச் சில தரப்பினரால் கடுமையான குறை கூறலுக்கு உள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version