Site icon அநேகன்

நான்கு மாதங்களில் 2,460 குடும்ப வன்முறைச் சம்பவங்கள்! 

புத்ரா ஜெயா, ஜூலை 16-

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நாட்டில் மொத்தம் 2,460 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு துணையமைச்சர் நொராய்னி அகமது தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான புகார்களில் குடும்ப மாதர்களே  பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இவற்றில், அவர்களுக்கு நெருக்கமானவர்களே அச்சம்பவங்களைப் புரிந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பதாக அவர் விவரித்தார்.

இதுபோன்ற குடும்ப வன்முறைச் சம்பவங்களைக் களைய அமைச்சு பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி வருவதாக நொராய்னி மேலும் சொன்னார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version