Site icon அநேகன்

மலேசியாவில் 2026 முதல் வாகன விலைகள் உயர வாய்ப்பு

கோலாலம்பூர், ஜூலை 17-

2026 ஆம் ஆண்டு முதல் புதிய கலால் வரி விதிமுறைகள் (P.U.(A) 402/2019) அமலாக்கப்படுவதால், மலேசியாவில் வாகன விலைகள் உயர வாய்ப்புள்ளதாக, மலேசிய ஆட்டோமொபைல் சங்கத்தின் (MAA) தலைவர் முகமட் ஷம்சோர் முகமட் ஜைன் தெரிவித்தார்.

இந்த புதிய வரி விதிமுறைகள் தொடர்பாக மேலும் விளக்கங்களை நிதி அமைச்சிடமிருந்து (MOF) எதிர்பார்ப்பதாகவும், இதன் தாக்கத்தை குறைக்க புதிய முறைகள் அறிவிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

“பழைய முறையில் கணக்கிடப்பட்டால், வாகனங்களின் OTR (ஆன்-தி-ரோடு) விலையில் 10 முதல் 30 சதவீதம் வரை உயர்வு ஏற்படலாம்,” என நேற்று இவ்வாண்டின் முதல் 6 மாதாங்கள் வரையிலான வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பற்றிய விவரங்களை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த பிப்ரவரியில் நிதி அமைச்சு 2026ஆம் ஆண்டு முதல் வாகன விலைகள் கணிசமாக உயரும் என்ற ஊடக அறிக்கைகளை மறுத்து, இந்த விதிமுறைகள் குறித்த இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தது.

முகமட் ஷம்சோர் மேலும் கூறுகையில், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்ய உற்பத்தியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசம் தேவை என்றும், ஐந்து மாதங்களே உள்ள தற்போதைய காலம் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இறக்குமதி கட்டணங்களின் தாக்கம் குறித்து பேசுகையில், மலேசியாவின் ஆட்டோமொபைல் துறையில் உதிரி பாகங்கள் மற்றும் பாகங்கள் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிப்பதாகவும், இவை அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (ரிங்கிட் 425 மில்லியன்) மதிப்புள்ளவை என்றும், இது நாட்டின் மொத்த ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் 80 சதவீதத்தை உள்ளடக்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version