Site icon அநேகன்

அன்வார் எதிர்ப்பு பேரணிக்கு தடையில்லை – 3 முக்கிய விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்! -சைஃபுடின்

புத்ராஜெயா, ஜூலை 17-

அமைதி பேரணியை நடத்த போலீசின் அனுமதி தேவையில்லை எனும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கின்றது.

ஆகையால், இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான பேரணியைத் தடையில்லை.

அமைதி பேரணி சட்டத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்கப்பட்டாலும், பேரணி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மூன்று முக்கிய விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வலியுறுத்தினார்.

“பேரணியில் பங்கேற்பவர்கள் மூன்று முக்கிய விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஆபத்தான ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, ஆட்சியாளர், சமயம் மற்றும் இனம் (3R) தொடர்பான உரைகள் இருக்கக்கூடாது, குழந்தைகளை அழைத்து வரக்கூடாது,”

“இந்த மூன்று தடைகளை மீறினால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்,” என்று சைஃபுடின் எச்சரித்தார்.

Exit mobile version