புத்ரா ஜெயா, ஜூலை 21-
நாட்டு மக்களுக்கான நற்செய்தி நாளை அல்லது புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம் என்றார் பிரதமர் .
இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தமக்குச் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
“மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எத்தகைய மாற்றங்கள் செய்ய வேண்டும், என்னென்ன அறிவிப்புகள் அவசியம் என்பதில் மிக கவனமுடன் செயலாற்ற வேண்டும்.
” இன்னும் ஓரிரு நாள்களில் தேவையான அறிவிப்பை நான் வெளியிடுவேன்”.
அது கூடுதல் உதவித் திட்டமாக இருக்கக்கூடும். ஆனால் அதைச் சரியாக மேற்கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என்று இன்று நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் பிரதமர் விவரித்தார் .

