Site icon அநேகன்

கல்வியமைச்சின் வழிகாட்டியைப் பின்பற்றுவீர்! பிரமுகர்களுக்கு ஃபட்லினா சிடேக் வேண்டுகோள்

கோலாலம்பூர், ஜூலை 21-

அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காகச் செல்லும் அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்கள் கல்வியமைச்சின் இரு வழிகாட்டிகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் கேட்டுக் கொண்டார்.

கல்வி அமைச்சின் சிறப்பு சுற்றறிக்கை, பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அழைப்புகள் அல்லது வருகைகளுக்கான வழிகாட்டி ஆகியவையே அவை என்றார்.

இந்நடவடிக்கையானது பள்ளிகளில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முறையாக நடப்பதை உறுதிப்படுத்துவதோடு மாணவர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்யும் என்று இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி பதில் அங்கத்தின் போது ஃபட்லினா சுட்டிக் காட்டினார்.

பள்ளிகளுக்கு நிதியுதவி அளிக்க விரும்பும் ஓர் அமைப்பு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கான நடைமுறைகள் பற்றி அறிய விரும்பிய டத்தோஸ்ரீ இக்மல் ஹிஷாம் அப்துல் அஜீஸின் துணைக்  கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலுரைத்தார்.

 

 

Exit mobile version