Site icon அநேகன்

13ஆவது மலேசிய திட்டம்: இந்தியர்களின் நல்வாழ்வுக்கு திட்டங்கள் தேவை! 

கோலாலம்பூர், ஆக. 1-

இந்திய சமூகத்தின் மேன்மைக்காக 13ஆவது மலேசிய திட்டத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள பெருந்திட்ட அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் மலாய் சமூகத்தின் பின் தங்கிய நிலையைக் களைய அவர்களுக்கென பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை அரசு அமல்படுத்தியிருப்பது போன்றே, வசதி குறைந்த நிலையில் இருக்கும் இந்திய சமூகத்தைக் கைதூக்கி விட அரசு நிறைவான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவும் அவற்றிற்குப் போதுமான நிதியையும் ஒதுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version