Site icon அநேகன்

எதிர்க்கட்சியினரின் ஊழலை பிகேஆர் அம்பலப்படுத்த வேண்டும்! 

கோலாலம்பூர், ஆக. 2-

16ஆவது பொதுத்தேர்தலில் வெற்றியடைய பிகேஆர் முன்னிலும் பன்மடங்கு தீவிரமாகப் பணியாற்றுவதோடு எதிர்க்கட்சிகளின் தவறுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சியைக் கைப்பற்றியது முதல் பக்காத்தான் ஹராப்பான் அடைந்துள்ள அடைவுநிலையை பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எடுத்துச் சொல்வதோடு ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயங்கும் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சித் தலைவர்களின் ஊழல் மற்றும் ஜனநாயகத்திற்கு மாறான செயல்களை மக்கள் மன்றத்தின் முன் வைக்க வேண்டுமென்றும் ரபிஸி வலியுறுத்தியுள்ளார்.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version