புத்ரா ஜெயா, ஆக. 3 – சிறாருக்கு ஏற்படும் தட்டம்மை, ருபெல்லா நோய்க்கு எதிராக நாடு முழுமையும் உள்ள சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆகஸ்டு 4தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
2030ஆம் ஆண்டு வாக்கில் இந்த இரு நோய்களை முற்றாக ஒழிக்கும் நோக்கத்தோடு 2020 ஆகஸ்டு 1முதல் 2025 ஜனவரி 31ஆம் தேதி வரையில் பிறந்துள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் மேற்கண்ட தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்படும்.
தட்டம்மை மற்றும் ருபெல்லா நோயும் தொற்று நோயாக இருக்கும் வேளையில் அதனால் பாதிப்படையும் சிறார்களுக்கு நிமோனியா, மூளைக் காய்ச்சல் வலிப்பு நோய் போன்றவை உருவாகும் அபாயமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த நோய்களினால் 2002இல் 231 சிறுவர்களும் 2023ஆம் ஆண்டு 112 பேரும் பாதிப்படைந்துள்ள வேளையில் 2024இல் 3,791 சிறார்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-பொன் முனியாண்டி

