புத்ரா ஜெயா, ஆக.23- அமைச்சரவையின் எந்தவொரு முடிவிலும் வெளியாரின் தலையீடு இல்லையென்றும் அமைச்சரவையின் முடிவுகள் யாவும் அதிகாரப்பூர்வ ரகசிய காப்புச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அரசாங்க தொடர்பு பேச்சாளர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
அவற்றை அனுமதியின்றி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் வகை செய்வதாக ஃபாஹ்மி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், முன்னாள் அமைச்சர் ரபிஸி ரம்லி, அமைச்சரவையின் முக்கிய முடிவுகளில் வெளியாரின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து ஃபாஹ்மி இதனைத் தெரிவித்தார்.
பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஃபர்ஹாஸ் வாஃபா சல்வடோர் ரிஸால் அம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக வதந்தி உலவி வருவதாக ரபிஸி குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பொன் முனியாண்டி

