Site icon அநேகன்

நிபந்தனைகளை மீறினர்: 348 குடும்பங்கள் பிபிஆர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்! 

கோலாலம்பூர், ஆக.23-

கூட்டரசு பிரதேசத்தில் மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் (பிபிஆர்) குடியிருக்கும் 5,307 குடும்பங்களில் 348 குடும்பங்கள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் அவ்வீடுகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கான தண்ணீர், மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தத் தவறியது, குடும்ப வருமானம் மாதமொன்றுக்கு 4,000 ரிங்கிட்டிற்கு அதிகமாக இருந்தது,  கோலாலம்பூரின் 35 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் சொந்த வீட்டைக் கொண்டிருந்தது, அந்நிய நாட்டவர்களைக் குடி அமர்த்தியது போன்ற காரணங்களால் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் அந்த வீடுகளில் குடியிருக்க இனியும்  அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநகர் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மாநகர் மன்றத்தின் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் 348 குடும்பங்களில் பலர் வேறிடங்களில் வீடுகள் கிடைக்காமல் தவிப்பதாகவும், மாநகர் மன்றம் எந்தவொரு வாய்ப்பையும் தராமல் விரைவில் வீட்டைக் காலி செய்ய வேண்டுமென்று வற்புறுத்துவதாகவும்  குடியிருப்பாளர்களில் பலர் கடும் நோயாளிகளாக இருப்பதாகவும் முறையிடப்படுகிறது.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version