Site icon அநேகன்

டிசம்பர் 12 முதல் ஜொகூர் பாரு – கோலாலம்பூர் இடையே ETS சேவை: அந்தோனி லோக்

குளுவாங்:

டிசம்பர் 12 முதல் ஜொகூர் பாரு – கோலாலம்பூர் இடையிலான ETS ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்தார்.

இந்த ரயில் சேவையைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் டிசம்பர் 11ஆம் தேதி ஜொகூர் பாருவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளார் என்றும் அந்தோனி லோக் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் ETS ரயில்கள் முதன்மையாக கோலாலம்பூரை மட்டுமே இணைக்கும். பின் பாடாங் பெசார் மற்றும் பட்டர்வொர்த்துக்கான நீண்ட தூர சேவைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று குளுவாங் ரயில் ஃபெஸ்டிவலில் கலந்து கொண்ட பின் லோக் இவ்வாறு கூறினார்.

நீண்ட தூர ரயில் பயணம் தினமும் இரண்டு முறை மட்டுமே மேற்கொள்ளப்படும். ஆனால் ஜொகூர் பாரு – கோலாலம்பூர் இடையிலான குறுகிய தூரங்களில் அதிகபட்ச பயணங்களை இயக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடமாநிலங்களுக்கு பயணிக்கும் மக்கள், ETS இணைப்பு நிலையங்களில் இருந்து மாற்று ரயில்களைப் பயன்படுத்தும்படி அவர் அறிவுறுத்தினார்.

2016 டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கிய RM8.9 பில்லியன் மதிப்புள்ள இந்த திட்டம் சிகாமாட், குளுவாங், கூலாய் மற்றும் ஜொகூர் பாரு வழியாக 192 கிமீ தூரத்தை உள்ளடக்கியது.

முழு சேவை அட்டவணைப்படி, தினமும் 12 ETS பயணங்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version