Site icon அநேகன்

மாணவர்களின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை: மகிழ்ச்சியில் சுங்கை புலோ மக்கள்

கல்வி எதிர்காலத்தை ஊக்குவிக்கும் வகையில், பேங்க் ரக்யாட் மற்றும் சுங்கை புலோ மக்களின் சேவை மையம் இணைந்து சுங்கை புலோவைச் சேர்ந்த 130 மாணவர்களுக்கு உதவி வழங்கினர்.

இந்த கல்வி உதவியின் மொத்த தொகை RM50,750 ஆகும். இதில் பேங்க் ரக்யாட் வழங்கிய RM38,500 வழங்கியது. அதோடு இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஆர். ரமணன தனிப்பட்ட நன்கொடையாக RM12,250 வழங்கினார்.

இந்த உதவி, சான்றிதழ் நிலை முதல் இளங்கலை வரை கல்வியை தொடர உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 2024 முதல், பேங்க் ரக்யாட் மற்றும் அதன் அறக்கட்டளை RM1.2 மில்லியன் மதிப்பிலான உதவிகளை 4,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கி, மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை ஆதரித்துள்ளது.

தற்போது சபாவில் இருக்கும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுதுறை துணையமைச்சரான டத்தோஶ்ரீ ரமணன் மாணவர்களுடன் நேரில் கலந்துகொள்ள முடியாமல் போனதால், காணொலி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அவரின் மூத்த உதவியாளர், ஃபிர்தாஉஸ் ஃபாரித் துணை அமைச்சரின் சார்பாக கலந்து கொண்டார்.

சுங்கை புலோவில் 2024 முதல் நடக்கும் கல்வி உதவி திட்டங்கள்:

பேங்க் ரக்யாட் மற்றும் அதன் அறக்கட்டளை, சுங்கை புலோ மக்களின் சேவை மையத்துடன் இணைந்து செயல்பட்டதற்கு இங்குள்ள பொதுமக்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

இத்தகைய முயற்சிகள், மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்துவதோடு, சமூக நலனை மேம்படுத்தும் முக்கிய படிகளாக அமைந்துள்ளது.

Exit mobile version