Site icon அநேகன்

துன் மகாதீர், டான்ஸ்ரீ முகைதீனை விசாரிக்க வேண்டும்!

கோலாலம்பூர், ஜூலை 19-

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை பதிவிலிருந்து அகற்றுவது குறித்து திட்டம் திட்டியதற்காக துன் டாக்டர் மகாதீர் முகமட், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினை சொஸ்மா சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய வேண்டுமென மலேசிய அறப்பணி சமூக இயக்கம் இன்று (19 போலீஸ் புகாரை மேற்கொண்டது.

பிரதமர் நஜீப்பை வீழ்த்துவதற்கான வியூகத்தை துன் மகாதீரும், டான்ஸ்ரீ முகைதீன் யாசினும் முன்னெடுத்ததாக முன்னாள் கெடா மாநில மந்திரி புசாரும் மகாதீரின் புதல்வருமான டத்தோ முக்ரீஸ் மகாதீர் கூறியிருந்தார். அந்த அடிப்படையில் இவர்கள் இருவரையும் விசாரிக்க வேண்டியது அரச மலேசிய போலீஸ் படையின் கடமையாகுமென போலீஸ் புகார் செய்ய டத்தோ ரமேஷ் ராவ் கூறினார்.

பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுத்து, மிகப் பெரிய குற்றமாகும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணைக்கு குறித்த மேல் விவரங்களைக்கு தம்மை அழைத்தாலும், உதவத் தயார் என ரமேஷ் ராவ் குறிப்பிட்டார்.  இந்த விவகாரத்தின் சம்பந்தப்பட்ட துன் மகாதீர், டான்ஸ்ரீ முகைதின் யாசின், டத்தோ முக்ரீஸ் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சொஸ்மாவின் கீழ் கைது செய்து விசாரணையை தொடங்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே இந்திய முஸ்லிம் அமைப்புகள் சார்ப்பாக நேற்று (18 செர்டாங் மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடந்த தேசிய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில், இந்திய முஸ்லிம்களுக்கான பூமிபுத்ரா அந்தஸ்து குறித்து, அரசு ஆலோசிக்குமென பிரதமர் நஜீப் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்துரைத்த ரமேஷ் ராவ், இந்திய முஸ்லிம்கள் தங்களின் அடையாளத்தை இழக்கக்கூடாது என்றார். இந்திய முஸ்லிம்கள் என்ற அடையாளம் மாற்றப்பட்டால், வரலாற்றில் அனைத்தும் மாறிவிடுமென்றும் அவர் எச்சரித்தார்.

Exit mobile version