Site icon அநேகன்

வொங் சியூ கிக்கு எதிராக அம்னோ தலைவர்கள் புகார்

ஷா அலாம்:

சிலாங்கூர் சுல்தானின் உத்தரவை மீறி, மூடிய பன்றி பண்ணை முறையை முன்மொழிந்த டி.ஏ.பி.யைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வொங் சியூ கி மீது நடவடிக்கை எடுக்க அம்னோ தலைவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சுல்தானை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பன்றியின் உருவப்படத்திற்கும், வொங் சியூ கியின் பிடிவாதமான போக்கே காரணம் என ஜமால் யூனோஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிலாங்கூரில் பன்றி வளர்ப்பை முழுமையாக நிறுத்த சுல்தான் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version