Site icon அநேகன்

இந்திய வணிக சமூகத்திற்கு தனி அமைச்சர் நியமனம் தேவை!

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய உணவக சங்கம் (PRIMAS), வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் 100 முதல் 200 இந்திய உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்த நிலைமைக்கு உடனடி தீர்வு காண பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என PRIMAS வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்திய வணிக சமூகத்தின் பிரச்சினைகளை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தனி இந்திய அமைச்சர் நியமனம் அவசியம் என PRIMAS தலைவர் டத்தோ J. கோவிந்தசாமி @ சுரேஷ்  தெரிவித்துள்ளார்.

Exit mobile version