Site icon அநேகன்

இணையத்தில் மேற்கொள்ளப்படும் உணவு வர்த்தகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு விதிகள் தேவை

கோலாலம்பூர்:

இணையத்தில் மேற்கொள்ளப்படும் உணவு வர்த்தகத்தைக் கண்காணிக்கவும், நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யவும் கூடுதல் விதிமுறைகள் தேவை என புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லினா அப்துல் ரஷீத் வலியுறுத்தினார்.

இணையதளங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் அடையாளம், உரிமம், பொருட்களின் மூலம் மற்றும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளைச் சரிபார்க்கும் நடைமுறை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஆபத்தான உணவுப் பொருட்களை உடனடியாக அகற்றுதல், திரும்பப் பெறப்படும் பொருட்கள் குறித்து வாங்கியவர்களுக்கு தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் இணையதள வர்த்தகத் தளங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

உணவுப் பொருட்களின் தோற்றம், தொகுதி எண், ஆய்வகப் பரிசோதனை முடிவுகள், போக்குவரத்து மற்றும் சேமிப்பு தகவல்களை விரைவாகக் கண்காணிக்க பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் சுகாதார அமைச்சு பரிசீலிக்க வேண்டும் என ஷெர்லினா வலியுறுத்தினார்.

Exit mobile version