Site icon அநேகன்

பசியற்ற உலகை நோக்கி மாணவர்களின் நலனில் புதிய முயற்சி – ‘அமிர்த சுரபி’ திட்டம்

கோலாலம்பூர்

தேசிய வகை நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளியில், மாணவர்களின் நலன் மற்றும் போதுமான உணவுத் தேவையை உறுதி செய்யும் நோக்கில் ‘அமிர்த சுரபி’ சிறப்புத் திட்டம் கடந்த 5ஆம் தேதி அக்டோபர் 2026 தொடங்கப்பட்டது.

மலேசிய கல்வி அமைச்சின் புதிய திட்டத்தின் கீழ், நிலையான வளர்ச்சி இலக்கை முன்னிறுத்தி ‘பசியற்ற உலகம்’ என்ற கருப்பொருளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மாணவர்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், அவர்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பள்ளி நிர்வாகம், இணைப்பாடப் பிரிவு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி வாரியச் சங்கம் ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் இம்முயற்சி, மாணவர் நலனுக்கான சமூகத்தின் ஒருங்கிணைந்த பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.

Exit mobile version