பெட்டாலிங் ஜெயா, அக். 18:
எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு, அஸ்ட்ரோ நிறுவனம் தனது சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை நேற்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜாஸ்மின் பால்ரூமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் அஸ்ட்ரோவின் தலைமை உள்ளடக்க அதிகாரி ஆக்னஸ் ரொசாரியோ, இந்திய உள்ளடக்க வணிகப் பிரிவின் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் ராஜாராம் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு விருந்து வழங்கப்பட்டதுடன், பரதநாட்டியம், இசைக் கருவிகளின் நேரடி இசை நிகழ்ச்சி மற்றும் உள்ளூர் பாடகர் பாலன் காஷின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.
அஸ்ட்ரோ வின்மீனில் ஒளிபரப்பாகவுள்ள தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சிகளில் Deepavali Kondattam இசை நிகழ்ச்சி, பாடகி சைந்தவி பங்கேற்கும் Up Close and Personal with Saindhavi, Savalai Samaali மற்றும் Sanjigai Deepavali Special ஆகியவை இடம்பெறுகின்றன.
மேலும், Adaikalam, Maya Oviyan, Kadhal Unfollow உள்ளிட்ட உள்ளூர் திரைப்படங்களும், Vishwanath and Sons, Jana Nayagan, DC, Kara உள்ளிட்ட திரைப்படங்களும் அஸ்ட்ரோவின் தீபாவளிச் சிறப்புப் படைப்புகளில் இடம்பெறுகின்றன

