Site icon அநேகன்

ஜோகூர் அரசுக்கு 14 நாள் கெடு: சிவமலர்

ஜோகூர், அக். 20 –

குளுவாங்  லாடாங் மெங்கிபோல் தமிழ்ப்பள்ளியின் புதிய வளாகத்துக்கான நில விவகாரம், 2017ஆம் ஆண்டு அரசிதழில் அறிவிக்கப்பட்டும் இதுவரை தீர்க்கப்படாதது குறித்து ஜோகூர் மாநில அரசு 14 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ விளக்கமளிக்க வேண்டும் என மக்கள் நீதிக் கட்சியின் (KEADILAN) துணைப் பொதுச் செயலாளரும் மத்திய தலைமை மன்ற உறுப்பினருமான சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.

புதிய பள்ளிக்காக 1.210 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு 2017 மே 11ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், நிலத்துக்கான இழப்பீட்டை மலேசியக் கல்வி அமைச்சு செலுத்திவிட்டதாகத் தகவல் உள்ள நிலையில், நில உரிமை நடைமுறைகள் ஏன் இன்னும் நிறைவடையவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இவ்விவகாரத்தில் ஜோகூர் மந்திரி பெசார் தலையிட்டு, பொறுப்பு அதிகாரியை நியமிப்பதுடன், நில நடைமுறைகளை முடிப்பதற்கான தெளிவான கால அட்டவணையையும் அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்ந்து பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, புதிய பள்ளித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version