Site icon அநேகன்

AI தொழில்நுட்பம் மலேசிய விளையாட்டுத் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் – கணேஷ் குமார் பங்கா

கோலாலம்பூர், அக்டோபர் 21: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மலேசியாவின் இலக்கவியல் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்று மலேசிய இலக்கவியல் பொருளாதாரக் கழகத்தின் (MDEC) தலைவர் கணேஷ் குமார் பங்கா தெரிவித்தார்.

மனிதர்களின் படைப்பாற்றலையும் AI தொழில்நுட்பத்தையும் இணைப்பதன் மூலம், விளையாட்டு உருவாக்குநர்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், உலகச் சந்தையில் போட்டியிடவும் முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், சிறந்த விளையாட்டுகளை உருவாக்குவதற்குப் படைப்பாற்றல், கற்பனைத்திறன் மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவை இன்றியமையாதவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

MDEC ஏற்பாட்டில் நடைபெறும் LEVEL UP KL 2026 நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், விளையாட்டு உருவாக்க நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை எளிதாகப் பயன்படுத்துவதற்கு National AI Compute Exchange (NACX) எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் MDEC ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

இதனிடையே, LEVEL UP KL 2026 நிகழ்ச்சியில் திறமையாளர்களுக்காக Talent Hub மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல், படைப்புகளுக்கான மதிப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாண்டு நிகழ்ச்சியின் வாயிலாக 400 வணிகச் சந்திப்புகளை நடத்துவதுடன், RM120 மில்லியன் மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்புகளையும் RM100 மில்லியன் மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகளையும் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 வணிக நிறுவனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version