Site icon அநேகன்

தாமான் பலாக்கோங் ஜெயா தேவிஸ்ரீ மாரியம்மன் ஆலய மேம்பாட்டிற்கு வேய்ன் ஓங் வெ.10,000 நன்கொடை

ஸ்ரீ கெம்பாங்கான் அக்.21-

சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாஙான், தாமான் பலாக்கோங் ஜெயாவில் வீற்றிருக்கும் தேவிஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மேம்பாட்டிற்காக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய் 10,000 வெள்ளி நன்கொடை வழங்கினார்.

இந்த ஆலயத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற விஜயதசமி விழாவிற்கு வேய்ன் ஓங் சிறப்பு வருகை புரிந்தார். சுற்று வட்டார இந்து பெருமக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகத் திகழும் இந்த ஆலயத்தில் அனைத்து வகை பூஜைகள் மற்றும் சமய நடவடிக்கைகள் சுமூகமான முறையில் மேற்கொள்ள தம்மால் இயன்ற உதவிகள் புரிய தயாராக இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். ஆலய பொறுப்பாளர்களிடம் வேய்ன் ஓங் 10,000 வெள்ளி நிதியுதவியை வழங்கினார்.

இந்த நிதியுதவி ஆலய வளர்ச்சி மட்டுமல்லாது சமய மேம்பாட்டிற்கும் உறுதுணை புரியும் என்றும் இதனை வழங்கிய வேய்ன் ஓங்கிற்கு இவ்வேளையில் ஆலய நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் எட்வின் தாங், முன்னாள் நகராண்மைக் கழக உறுப்பினர் பில்லி சூன் கின் வா, இந்திய சமூக தலைவர் கிறிஸ்டி மற்றும் தாமான் மேகா செராஸ் இந்தியர் குடியிருப்போர் கழக தலைவர் வீ. நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version