Site icon அநேகன்

சூராவில் சீன சமூகத்தினருக்கு இடமளித்ததை விவகாரமாக்கும் சர்ச்சைக்குரிய சமய போதகர்!

கோலாலம்பூர், நவ. 7-
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சீன சமூகத்தினருக்கு பினாங்கு ஜோர்ஜ்டவுனிலுள்ள ஒரு தொழுகையிடத்தில் (சூராவ்) தற்காலிகமாக தங்குவதற்கு இடமளிக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய சமய போதகரான ஜாமிஹான் மாட் ஜைன் கருத்தை பதிவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட தொழுகையிடத்தில் அது போன்று நிகழ்ந்திருக்கக்கூடாது என கூறியிருக்கும் அவர், இந்த சூழ்நிலையை அவசரகால பிரகடனமாக வகைப்படுத்த முடியாது என அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கான சலவைக் கடை விவகாரம் தொடர்பில் ஜொகூர் சுல்தான் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத்துறையின் (ஜாக்கிம்) அதிகாரியான ஜாமிஹான் மாட் ஜைன் தற்போது மீண்டும் சர்ச்சையான கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். படத்தில் உள்ளது போல் நிகழ்ந்திருக்ககூடாது. இதனை அவசர காலமாக வகைப்படுத்த முடியாது காரணம் அவர்கள் தேவைக்கான வேறு இடங்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சமய விதிகள் அடிப்படையில் கருத்துகள் மாறுபட்டிருந்தாலும் சீன சமூகத்தை சேர்ந்தவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு இடமளித்த தாமான் ஃபிரி ஸ்கூல் தொழுகையிடத்தின் இச்செயல் குறித்து சமூகவலைத்தளவாசிகள் பாராட்டி வருகின்றனர். சீன ஆடவர் சட்டையில்லாமல் குளிர் தாங்காமல் உட்கார்ந்திருப்பதோடு அருகில் முட்டிக்காலுக்கு மேலான குட்டை சிலுவாரை அணிந்திருந்த பெண் மற்றும் இன்னும் பலர் அந்த தொழுகையிடத்தினுள் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்து சாப்னோ துக்கிஜோ (வயது 50) கூறுகையில், பாதிக்கப்பட்ட அந்த சீன சமூகத்தினர் அருகாமையிலுள்ள ஆலயத்திற்குத்தான் செல்ல நினைத்தனர். ஆனால், கடுமையான நீரோட்டம் காரணமாக அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை. அதனால், பாதுகாப்பு கருதி அவர்களை தொழுகையிடத்திற்குள் தாம் அனுமனித்ததாக அவர் கூறினார். என்னுடைய இந்த செயல் குறித்து சர்ச்சையாக்கப்படும் என எனக்கு தெரியும். ஆனால், வெள்ள நீரோட்டத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர்களுக்கு உதவாமல் இருந்திருந்தால் நிச்சயமாக நான் குற்றம் இழைத்தது போன்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டிருக்கும் என சாப்னோ துக்கிஜோ குறிப்பிட்டார்.

Exit mobile version