Site icon அநேகன்

2018 உலக கிண்ண கால்பந்துப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெறும் – ரோசி நம்பிக்கை!

ரோம், நவ.9  –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு இத்தாலி நிச்சயம் தகுதி பெறும் என அதன் மத்திய திடல் ஆட்டக்காரர் டேனியல் டி ரோசி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அதேவேளையில் சுவீடனுக்கு எதிரான தகுதிச் சுற்றில் இத்தாலி ஆட்டக்காரர் 110 விழுக்காடு தங்களின் உழைப்பைக் கொட்ட வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

1962 ஆம் ஆண்டு தொடங்கி இத்தாலி , உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெறவில்லை என்பதை கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாது என டேனியல் டி ரோசி கூறினார்.

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் ஜி பிரிவுக்கான தகுதி சுற்றில் ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாவது இடத்தைப் பிடித்த இத்தாலி தற்போது பிலே ஆப் சுற்றில் சுவீடனை எதிர்கொள்ளவுள்ளது.

Exit mobile version