Site icon அநேகன்

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் டெல்ஸ்டார் பந்து!

சூரிக் , நவ.10 –

ரஷ்யாவில் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் டெல்ஸ்டார் பந்து பயன்படுத்தப்படும் என ஃபிபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின்போது பயன்படுத்தப்பட்ட டெல்ஸ்டார் பந்துக்கு ஃபிபா மீண்டும் உயிர் கொடுத்துள்ளது.

டெல்ஸ்டார் 18 பந்தை அடிடாஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பந்தைக் காட்டிலும் தற்போது வெளியிடப்படும் டெல்ஸ்டார் பந்து , கால்பந்து ஆட்டக்காரர்களிடையே வரவேற்பை பெறும் என ஃபிபா நம்பிக்கைக் கொண்டுள்ளது.

1970 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில், கால்பந்து சகாப்தங்களான பிரேசிலின் பெலி , ஜெர்மனியின் கெர்ட் முல்லர், இத்தாலியின் கியாசிந்தோ பச்சேட்டி, இங்கிலாந்து போபி மூர் ஆகியோர் 18 டெல்ஸ்டார் பந்தை பயன்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகள் பல சமயங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2006 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட டீம்ஜெய்ஸ்ட், 2010 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட ஜாபுலானி பந்துகளை சில ஆட்டக்காரர்கள் விமர்சித்துள்ளனர்.


1978 ஆம் ஆண்டில் தாங்கோ, 1982 ஆம் ஆண்டில் அஸ்டேக்கா, 1990 ஆம் ஆண்டில் எட்ரஸ்கோ, 1994 ஆம் ஆண்டில் குவேஸ்ட்ரா, 1998 ஆம் ஆண்டில் திர்கோலர், 2002 ஆம் ஆண்டில் பீவர்நோவா , 2006 ஆம் ஆண்டில் டீம்ஜெய்ஸ், 2010 ஆம் ஆண்டில் ஜாபுலாலி, 2014 ஆம் ஆண்டில் பிராசுக்கா போன்றவை உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பந்துகளாகும்.

Exit mobile version